உயிரை கையில் பிடித்து செல்லும் தெ.புதுக்கோட்டை பகுதி மக்கள்

கனரக வாகனங்கள் செல்வ–தால் சேதம் அடைந்துள்ள–தாகவும் கிராம மக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரை கையில் பிடித்து செல்லும் தெ.புதுக்கோட்டை பகுதி மக்கள்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத் திற்கு உட்பட்ட மானாமதுரை பரமக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சவடு மணல்கள் ஏற்றி வரும் லாரிகள் அளவுக்கு அதிவேகமாக லோடுகளை ஏற்றிக் கொண்டு செல்கிறது.

அவ்வாறு இயக்கப்படும் லாரிகளை டிரைவர்கள் அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தெ.புதுக் கோட்டை, கோச்சடை, சின்ன புதுக்கோட்டை, குறிச்சி, நல்லாண்டிபுரம், காரைக்குடி பகுதி கிராம மக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

இப்பகுதியில் உள்ள சாலை புதுப்பிக்கப்பட்டு கடந்த சில வருடங்களை ஆன நிலையில் மீண்டும் கனரக வாகனங்கள் செல்வதால் சேதம் அடைந்துள்ளதாகவும் கிராம மக்கள் தரப்பில் புகார் கூறப்படு–கிறது.

மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பிரதான தொழில் விவசாயம் என்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு சாலையில் சொல்லும் போது உயிரி–ழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சவடுண் லாரிகளின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com