தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும்

வருகிற 6-ந் தேதி நடக்கிற தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.
தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரு கின்ற 6-ந் தேதி காலை 9 மணிக்கு மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெறு கிறது. இந்த நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.

இதில் மாணவ, மாணவி கள் பயன்பெறும் வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் தொழில் பயிற்சிக்கான வழிகாட்டி கையேடுகள், தொழில் முனைவோர் மற்றும் உயர் கல்விக்கான கடன் திட்ட உதவிகள் பெறுவது குறித்து வங்கியாளர்களின் ஆலோ சனை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறையின் ஆலோ சனை மற்றும் உயர்கல்வி ஆலோசனை வழங்கப்பட வுள்ளது.

மேலும் இக்கருத்தரங் களில் மாணவ, மாணவிகளி டம் எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்து அதற் கேற்ப உரிய விளக்கங்களை அளிப்பதற்கும் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதால் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக் கான விளக்கங்களை கேட் டறிந்து பயன்பெற வேண் டும் என அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com