சிவாலயங்களில் சனிபிரதோஷவிழா

மானாமதுரை பகுதியில் சிவாலயங்களில் சனிபிரதோஷவிழா நடந்தது. 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவாலயங்களில் சனிபிரதோஷவிழா
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று கரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் எழுந்த ருளி கோவிலில் உள்ள பிரகாரத்தில் வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பள்ளியறை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மானாமதுரை-பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவிலில் உள்ள காசிவிஸ்வநாதர் திருலிங்க திருமேனிக்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

நாளை (திங்கட்கிழமை) காலை வருஷாபிஷேக மும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் மற்றும் பவுர்ணமி பூஜையும் இங்கு நடைபெறுகிறது.

இதேபோல் நாகலிங்கம் நகர் அருணாச்சலேஸ்வரர், இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், மேலெநெட்டூர் சொர்ண வாரிஸ்வர் கோவில்களிலும் சனிபிரதோஷம் பூஜைகள் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com