குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்; உரிமையாளர் கைது

குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்; உரிமையாளர் கைது செய்யப்பட்டார். உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்; உரிமையாளர் கைது
Published on

சிவகங்கை

சிவகங்கை பஸ் நிலையம் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகங்கை டவுன் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது மாதவன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட 50 பாக்கெட் குட்கா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அதனை பறிமுதல் செய்ததுடன் உணவு பாதுகாப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் கடை உரிமையாளர் மாதவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் அருகில் இருந்த மலைச்சாமி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் 5 பாக்கெட் குட்கா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

அவற்றையும் பறிமுதல் செய்து உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com