கைதி தப்பி ஓட்டம்

அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்ற கைதி தப்பி ஓட்டம்
தப்பி ஓடிய கைதி சரவணலிங்கம்
தப்பி ஓடிய கைதி சரவணலிங்கம்
Published on

சிவகங்கை

சிவகங்கையை அடுத்துள்ள சாத்தரச ன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முனுசாமி, சரவணலிங்கம். இருவரும் நேற்று சாத்தரசன்கோட்டை அருகே சிங்காவோடை பகுதியில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் சரவணலிங்கம் முனுசாமியை கம்பியால் தாக்கினாராம். 

இதில் இருவருக்கும் காயம் ஏற்படவே சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த முனுசாமி மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

இது குறித்து சிவகங்கை தாலுகா காவல்நிலையத்தில் முனுசாமி மீது தாக்குதல் நடத்தியதாக சரவணலிங்கம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

சரவணலிஙகம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் 2 காவலர்கள் பாதுகாப்பில் 205-வது வார்டில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததும் அவரை கைது செய்ய போலீசார்  முடிவு செய்தனர். 

இந்தநிலையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த சரவணலிங்கம் அவர்களது கண்காணிப்பையும் மீறி தப்பிவிட்டார். தப்பியோடிய சரவணலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர். 

மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சி பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர். தப்பியோடிய சரவணலிங்கத்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. காவலர்கள் பாதுகாப்பில் இருந்தவர் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com