பெருமாள் கோவில் தேர் பவனி

தேவகோட்டை பெருமாள் கோவில் தேர் பவனி நடந்தது. விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெருமாள் கோவில் தேர் பவனி
Published on

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை நகரில் பழமையான கோதண்டராம சுவாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று கருடசேவை, யானை, குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது. நேற்று காலை பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதன் பின்னர் தேர்பவனி நடந்தது.

பெருமாள் கோவில் 4 வீதிகளில் தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோவிந்தா நாமம் சொல்லி தேர் இழுத்தனர். தேர் முன்பாக பக்தர்கள் மங்கள இசை, மேளதாளத்துடன் சென்றனர். வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். 4 வீதிகளிலும் தேர் வலம் வந்தபோது குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com