மக்கள் குறைதீர் கூட்டம்

சிவகங்கையில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் மகளிர்களுக்கு உதவித் தொகை வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் மகளிர்களுக்கு உதவித் தொகை வழங்கினார்.
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனா ளிகளுக்கான உபகர ணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, பொது மக்களிட மிருந்து 577 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் மானாமதுரை, திருப்புவனம் வட்டத்திற்குட் பட்ட 4 பயனாளிகளுக்கு ரூ.10,084 மதிப்பீட்டிலான மானியத்தொகையுடன் கூடிய வேளாண் இடுபொ ருட்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மதகுபட்டி பைரவர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கடனுதவி வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com