புரவி எடுப்பு விழா

புரவி எடுப்பு விழா நடந்தது. மகிழம்பூ அய்யனார் கோவில் சென்றடைந்தது.
புரவி எடுப்பு விழா
Published on

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கே.வைரவன்பட்டி மகிழம்பூ அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் கொடுக்கப்பட்டு குலாளர்களால் புரவிகள் செய்யப்பட்டது. கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டு விரதம் மேற்கொள்ளப்பட்டது.

புரவி எடுப்பு நாளில் குதிரைகள் ஊர் நடுவேயுள்ள அய்யனார் திடல் புரவிப் பொட்டலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இரவு முழுவதும் கோலாட்டம், கும்மியாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. புரவிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

ஊர் நடுவேயுள்ள அய்யனார் திடலில் இருந்து புரவிகள் ஊர்வலமாகப் புறப்பட்டு 2 பெரிய புரவிகளைத் தொடர்ந்து சிறிய புரவிகளுடன் 50-க்கும் மேற்பட்ட மதலைகள் நேர்த்திக்கடனாக மகிழம்பூ அய்யனார் கோயில் சென்றடைந்தது. இதில் கே.வைரவன்புட்டி மற்றும் அதன் சுற்றப்புர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com