தேசிய ஒற்றுமை தினம்

தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.
தேசிய ஒற்றுமை தினம்
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது.

இதில் கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேக் அப்துல்லா தேச ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com