மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் மகிஷா சூரசம்ஹாரம்

மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. 4 ரத வீதியில் வலம் வந்து ஈசானிய மூலையில் அமைந்துள்ள மகர்நோன்பு பொட்டலில் எழுந்தருளினார்.
மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியையொட்டி சிவாச்சாரியார் அம்பு எய்தார்.
மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியையொட்டி சிவாச்சாரியார் அம்பு எய்தார்.
Published on

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.முறையூர் மீனாட்சி- சொக்கநாதர் கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. கடந்த 9 நாட்களாக அம்மன் பல்வேறு அலங்காரங்களில் கொலு மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

நிறைவு நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு அன்னை மீனாட்சி குதிரை வாகனத்தில் எழுந்தருளி 4 ரத வீதியில் வலம் வந்து ஈசானிய மூலையில் அமைந்துள்ள மகர்நோன்பு பொட்டலில் எழுந்தருளினார்.

அங்கு அமைக்கப்ப ட்டிருந்த மகிஷாசூரன் குடிலை நோக்கி 4 திசையிலும் சிவாச்சாரியார் அம்புகளை எய்தார். இதனை காண மகர்நோன்பு பொட்டலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம், கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com