மாணவ-மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமம்

சாகிர் உசேன் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்களுக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது.
மாணவ-மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமம்
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி கல்லூரி நேரத்தில் அளிக்கப்படுகிறது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஓட்டுநர் உரிமம் பெற்ற 17 மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் செய்யது அபுதாஹிர் கலந்து கொண்டார்.

இந்த திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை 895 மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஓட்டுனர் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். மிக குறைத்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி பெற்றவர்களுக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது.  

X

Maalai Malar
www.maalaimalar.com