மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை

மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். அரசு பொதுதேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற சங்க சார்பில் மாநில மகளிர் மாநாடு பற்றிய ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் தியாகராஜன் நீலகண்டர் தலைமை யில் நடந்தது. மாவட்ட தலைவர் கணேஷ் பால்பாண்டி வரவேற்றார்.

அரசு பொதுதேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழகத்தில் உள்ள அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை ரூ10ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்.

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பு களில் 5 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். மண்பாண்ட தொழில் செய்ய களிமண் எண் எடுக்க தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், குமார், அசோக் உள்படபலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com