பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

சிங்கம்புணரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் ஆகாஷ்.
மாணவர் ஆகாஷ்.
Published on

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). இவர் மதுரையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று மாலை மாணவர் ஆகாஷ், திருப்பத்தூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி பகுதியில் சென்று கொண்டி ருந்தபோது அவரது மோட்டார் சைக்கிள், எதிரே காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய மாணவர் ஆகாஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியானார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.பி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com