இலுப்பக்குடியில் காலை சிற்றுண்டி திட்டம்

இலுப்பக்குடியில் அரசு தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியது. ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்.
இலுப்பக்குடியில் காலை சிற்றுண்டி திட்டம்
Published on

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவாக்கப்பட்ட தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், இலுப்பக்குடி ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, உறுப்பினர்கள் சீதா வைரவன், அமுதா லெட்சுமணன், இலுப்பக்குடி ஊராட்சி செயலர் வீரப்பன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை குழந்தை தெரஸ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com