பா.ஜ.க. நிர்வாகி கார் உடைப்பு

இளையான்குடியில் பா.ஜ.க. நிர்வாகி கார் உடைக்கப்பட்டது. டீக்கடை முன்பு காரை விட்டு இறங்கியபோது 50-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வேலூர் இப்ராஹிம் கார் மற்றும் அவருடன் வந்த கார்களை தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.
கார் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த படம். 
கார் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த படம். 
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பா.ஜ.க. மாநில சிறுபான்மை பிரிவு செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவர் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளையான்குடி வழியாக ராமநாதபுரம் வந்தார்.

அப்போது இளை யான்குடி கண்மாயக்கரை பகுதியில் அவருக்கு நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். அதன்பின் ஒரு டீக்கடை முன்பு காரை விட்டு இறங்கியபோது 50-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வேலூர் இப்ராஹிம் கார் மற்றும் அவருடன் வந்த கார்களை தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவத்திற்கு இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி சாலை கிராமம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் வேலூர் இப்ராஹிம் சாலைகிராமத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் ராமநாதபுரம் சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com