மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு

மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டது. திருடுபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு
Published on

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நாகாடியை சேர்ந்த வர் சுப்பிரமணியன். இவரது மனைவி கனகம் (வயது45). இவர் சம்பவத்தன்று மொபட்டில் தேவகோட்டை பஜாருக்கு சென்றார். அங்கு ரெடிமேட் ஆடைகளை வாங்கிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

தேவகோட்டை-சிவ கங்கை சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது திடீரென அந்த நபர் கனகத்தை வழிமறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்து வாகனத்தை நிறுத்தினார். அப்போது மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி கனகம் கழுத்தில் அணிந்தி ருந்த 10 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.

இதுகுறித்து அவர் வேலாயுதபட்டிணம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டப்பகலில் தாலிச்செயினை பறித்த மர்ம நபரை தேடி வருகின் றனர். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com