வாளுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது

வாளுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை -ராமேசுவரம் 4 வழி சாலையில் கீழடி விலக்கில் வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டினர்.
கைது
கைது
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பிரபாகரன் மற்றும் முத்துமணி. இருவரும் திருப்புவனம் அருகே உள்ள மதுரை -ராமேசுவரம் 4 வழி சாலையில் கீழடி விலக்கில் வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டினர். இதுகுறித்து திருப்புவனம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்த போலீசார் விரைந்து சென்று வாளுடன் திரிந்த 2 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com