காப்பகத்தில் இருந்து தப்பிய 2 சிறுமிகளுக்கு வலைவீச்சு

சிவகங்கை காப்பகத்தில் இருந்து தப்பிய 2 சிறுமிகளை தேடி வருகிறார்கள். பொறுப்பாளர் ஜெயா சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார்.
காப்பகத்தில் இருந்து தப்பிய 2 சிறுமிகளுக்கு வலைவீச்சு
Published on

சிவகங்கை

சிவகங்கையில் சமூக நலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்படும் வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதர வற்ற குழந்தைகள் தங்கி இருந்து படித்து வருகின்ற னர். மேலும் குற்ற வழக்கு களில் கைதான மைனர் சிறுமிகள் கோர்ட்டு அனுமதி யுடன் இங்கு தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

இந்த காப்பகத்தில் கடந்த மாதம் காரைக்குடி போலீ சார் ஒரு வழக்கு தொடர்பாக 15 வயது சிறுமி ஒருவரையும், தேவகோட்டை போலீசார் 16 வயது சிறுமி ஒருவரையும் கோர்ட்டு அனுமதியுடன் தங்க வைத்திருந்தனர்.

இந்த நிலையில் அந்த 2 சிறுமிகளும் நேற்று காலையில் கழிவறை செல்வ தாக கூறிவிட்டு சென்றனர். பின்னர் காப்பகத்தில் பின்புறம் உள்ள சுவர் மீது ஏறி அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காப்ப கத்தின் பொறுப்பாளர் ஜெயா இதுதொடர்பாக சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் இருந்து தப்பி சென்ற 2 சிறுமிகளும் எங்கு உள்ளனர்? என்று விசா ரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் என்று கருதுவதால் போலீசார் காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து வேறு எங்காவது சென்றிருக்கலாம் என்றும் போலீசார் கருது கின்றனர். அதனடிப்படை யிலும் சிறுமிகளை பல இடங்களில் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com