ரூ.1,216 கோடி மதிப்பிலான கடனுதவிகள்-அமைச்சர் வழங்கினார்

சிவகங்கையில் ரூ.1,216 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.
வங்கி கடன் அனுமதியை பயனாளிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஆஷாஅஜித் மற்றும் பலர் உள்ளனர்.
வங்கி கடன் அனுமதியை பயனாளிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஆஷாஅஜித் மற்றும் பலர் உள்ளனர்.
Published on

சிவகங்கை

சிவகங்கையில் மாவட்ட அளவிலான தொழில் கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1 லட்சத்து 20 ஆயிரத்து 791 பயனாளி களுக்கு ரூ.1216.63 கோடி மதிப்பிலான வங்கி கடன் அனுமதி மற்றும் வங்கி கடன் பட்டுவாடாவுக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதா வது:-

தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறந்த விளங்க வேண்டும் என்ற அடிப்படை யில் முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் திடும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2022-2023 முதல் 143 பயனாளிகளுக்கு 13.10 கோடி அளவில் வங்கி மூலம் கடனுதவி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டிற்கு (2023-24) 210 பயனாளி களுக்கு 20.13 கோடி கடனுதவி செய்து தருவ தற்கும் இலக்கு நிர்ண யிக்கப்பட்டது.

இதுதவிர மேற்காணும் திட்டங்களில் வியாபார தொழில்கள், உற்பத்தித் தொழில்கள் மற்றும் சேவை தொழில்கள் செய்வதற்கும் மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பித்து வங்கி கடனுதவிகள், அரசின் மானியத்துடன் அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று சிறு-குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அர சால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ் வாதாரத்தினை மேம் படுத்தி்க் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜுனு மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com