சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

ம.தி.மு.க. சார்பில் கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், மாநில மருத்துவர் அணி செயலாளர் வி.எஸ். சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. நகர செயலாளர் ரத்தினவேல் குமார் வரவேற்று பேசினாார்.தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முதல் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், தொகுதி செயலாளர் பீர் மைதீன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர். நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சசி முருகன், ராஜகுரு, குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் பொன் ஆனந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாஜலபதி, தென்காசி, விருதுநகர் இணையதள மண்டல பொறுப்பாளர் சங்கரசுப்பு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலெட்சுமி சுப்பையா, இளைஞர் அணி துணைச்செயலாளர் முகமது ஹக்கீம், பூக்கடை பொன்னுச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com