சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி பிரமோற்சவ விழா

108 கணபதி ஸ்தலங்களுள் 81-வது ஸ்தலமான உன்னதபுரம் என்கிற மெலட்டூரில் தனிக்கோவில் கொண்டு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தெட்சணா மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அலங்காரத்தில் தெட்சணாமூர்த்தி விநாயகர்
சிறப்பு அலங்காரத்தில் தெட்சணாமூர்த்தி விநாயகர்
Published on

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் விவாஹ வரம் தந்து அருளக்கூடியவர். இங்கு நடைபெறும் 10 நாள் பிரமேற்சவத்தில் ரீசித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தெட்சணா மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது நம்பிக்கை.

மெலட்டூர் ரீசித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவில் ஞானபுரத்தில் ஸ்ரீகர்க மஹரிஷியால் வர்ணிக்கப்–பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களுள் 81-வது ஸ்தலமான உன்னதபுரம் என்கிற மெலட்டூரில் தனிக்கோவில் கொண்டு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் இந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் மெலட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் மெலட்டூரை சேர்ந்த எம்.எஸ்.ராதா கிருஸ்ண அய்யர், வீ.கணேச அய்யர், எம்.ஆர்.சிவராம அய்யர் ஆகியோரால் நிர்மானிக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்க ப்பட்டு வருகிறது.

இங்கு வருடந்தோறும் விநாயகர் சதுர்த்திவிழா 10 நாட்கள் பிரமோற்சவமாக நடந்து வருகிறது. இந்த நாட்களில் சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் பலவித வாகனங்களில் காலையும், மாலையும் வீதியுலா வருவது சிறப்பாகும். தவிர பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7வது நாள் ;நிகழ்ச்சியன்று நடைபெறும் ரீவிநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக அரிதான நிகழ்ச்சியாகும்.

அன்றைய தினம் காலையில் ரீ தெட்சணா மூர்த்தி விநாயகருக்கு சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெறும். இது தமிழ்/நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். திருமணம் ஆகாதவர்களும், திருமணம் காலதாமதமாகும் ஆண்களும், பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து ரீசித்தி புத்தி சமேத தெட்சணாமூர்த்தியை தரிசித்து பிரார்த்தனை செய்து மலர் மாலையும், மஞ்சள் கயறும் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு பிரமோற்சவம் அடுத்த மாதம் 21ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்க உள்ளது. 4ம்நாள் நிகழ்வாக காலை சுவாமி வெள்ளி பல்லக்கில் வீதியுலாவும், 5ம் நாள் நிகழ்ச்சியாக ஓலை சப்பரத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. 7ம் நிகழ்ச்சியாக 28ம்தேதி காலை 9.30 மணியளவில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவமும், 30ம்தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. திருக்கல்யாண வைபவம் மற்றும் பிரமோற்சவ ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் பக்தர்கள் உதவியால், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com