சிவன்மலை முருகன் கோவிலில் தங்க தேர் இழுத்த அ.ம.மு.க.வினர்

ஜெகநாதன் தலைமையில் மாநில மருத்துவர் அணிதுணை செயலாளர் டாக்டர் கிங் முன்னிலையில் நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்தனர். மாவட்ட இளைஞர்அணி தலைவர் ஆனந்தன், கொங்குநகர் பிரதிநிதி தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவன்மலை முருகன் கோவிலில் தங்க தேர் இழுத்த அ.ம.மு.க.வினர்
Published on

திருப்பூர் :

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் 60-வது பிறந்த நாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இருக்கும் சிவன்மலை ஆண்டவர் முருகன் கோவிலில் தங்க தேர் இழுக்கும் விழா மாவட்ட பொருளாளர் சேகர் என்ற ஜெகநாதன் தலைமையில் மாநில மருத்துவர் அணிதுணை செயலாளர் டாக்டர் கிங் முன்னிலையில் நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் கோமதி செல்வராஜ்,மாவட்டக் துணை செயலாளர் சூர்யா செந்தில், மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ரத்தினசாமி, மாவட்ட  பனியன் தொழிலாளர் சங்க செயலாளர் சுரேஷ் ராஜா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குட்வின்பழனிச்சாமி, கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மாரிமுத்து, மாவட்ட இளைஞர்அணி தலைவர் ஆனந்தன், கொங்குநகர் பிரதிநிதி தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com