தில்லைவிளாகம் அரசு பள்ளிக்கு கேடயம்

திருவாரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. தில்லைவிளாகம் அரசு பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது.
தில்லைவிளாகம் அரசு பள்ளிக்கு கேடயம்
Published on

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.

இதில் தில்லை விளாகம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

கேடயத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com