சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாய், மகன் சிறையில் அடைப்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாய், மகன் சிறையில் அடைப்பு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ஜெயா (வயது 38). இவர்களது மகன் அருண் (20) கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த சிறுமி பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி, அருண், ஜெயா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com