புளியரை வழியாக கனிமவளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி- நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை

அதிகனரக கனிமவள வாகனங்கள் புளியரை வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. புளியரை வழியாக திருவனந்தபுரம் மருத்துவமனை செல்லும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
புளியரை வழியாக கனிமவளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி- நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை
Published on

கடையம்:

அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கடந்த சில நாட்களாக தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகனரக கனிமவள வாகனங்கள் செல்வதால் அதிகாலை 3 மணி முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் புளியரை வழியாக திருவனந்தபுரம் மருத்துவமனை மற்றும் விமான நிலையத்துக்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. அவ்வழியாக பஸ்சில் செல்லும் பொதுமக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாகி யுள்ளனர்.

எனவே முதல்- அமைச்சர் உடனடியாக தலையிட்டு அதிகனரக வாகனங்கள் செல்வதை தடுத்து போக்குவரத்தை சீர் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com