செங்கோட்டை நகராட்சியில் புதிய கமிஷனர் பதவி ஏற்பு

செங்கோட்டை நகராட்சியில் புதிய கமிஷனர் பதவி ஏற்றார்.இவர் அம்பாசமுத்திரம் நகராட்சியில் கமிஷனராக பணியாற்றியவர்.
புதிய கமிஷனர் பார்கவி.
புதிய கமிஷனர் பார்கவி.
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சியில் கமிஷனராக பணியாற்றி வந்த இளவரசன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு மாறுதலாக சென்றார்.

இந்நிலையில் அம்பாசமுத்திரம் நகராட்சியில் கமிஷனராக பணியாற்றி வந்த பார்கவி தற்போது செங்கோட்டை நகராட்சி ஆணையளராக பொறுப்பேற்றார்.

அவருக்கு நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமி, நகராட்சி மேலாளர் ரத்தினம், பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் ராமசந்திரன், சுகாதார ஆய்வாளர் பழனிசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com