அரவைக்காக நெல் அனுப்பி வைப்பு

நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1000 டன் நெல் அரவைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர்.
அரவைக்காக நெல் அனுப்பி வைப்பு
Published on

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com