

சென்னை:
கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு ஜனவரி 20-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 21-ந்தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தையும் சென்னை பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.
தொற்று பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.