கீழ்ப்பாக்கத்தில் ரூட்தல போட்டியில் மாணவர்கள் பயங்கர மோதல்- 8 கத்தி பறிமுதல்

கீழ்ப்பாக்கத்தில் மாணவர்கள் நடுரோட்டில் ஒருவருக்கொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்ட சம்பவத்தில் 8 கத்திகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 கத்தி பறிமுதல்
8 கத்தி பறிமுதல்
Published on

சென்னை:

சென்னையில் கல்லூரி மாணவர்கள் ‘ரூட் தல’ போட்டியில் அடிக்கடி மோதிக் கொள்வது வாடிக்கையாகவே உள்ளது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் மாணவர்களின் மோதல் முடிவுக்கு வராமலேயே உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் கீழ்ப்பாக்கம் பச்சையப்பா கல்லூரி அருகே மாணவர்கள் நடுரோட்டில் ஒருவருக்கொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கீழ்ப்பாக்கம் போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததுமே மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். இதில் 6 மாணவர்கள் போலீசில் சிக்கினர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 8 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கல்லூரி அருகே ஒரு பையில் போட்டு பதுக்கி வைத்த கத்திகளை கைப்பற்றிய போலீசார் அதனை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். பூந்தமல்லி, திருத்தணி பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்களை ‘ரூட் தல’ போட்டியில் நடுரோட்டில் மோதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பிடிபட்ட 6 மாணவர்களை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பான நேரத்தில் மாணவர்கள் நடுரோட்டில் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com