விதை பரிசோதனை செய்வதால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்

மருத்துவ குணங்கள் மற்றும் விதைப்பரிசோதனை முறைகள் குறித்தும் ஆலோ சனை வழங்கப்பட்டுள்ளது.விதைக்கான செலவை குறைத்துக்கொள்வதுடன் அதிக மகசூல் பெறலாம்.
விதை பரிசோதனை செய்வதால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்
Published on

தஞ்சாவூா்:

பாரம்பரிய நெல் ரகங்கள் மருத்துவ குணம் நிறைந்தவை. பயிரிடுவதற்கு முன்பு விதைப்பரிசோதனை செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு தஞ்சாவூர் விதைப்பரிசோதனை அலுவலர் குப்புசாமி ஆலோசனை வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

நம் முன்னோர்கள் அன்றாட உணவில் பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தியதால் நீண்டகாலம் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர்.

பாரம்பரிய நெல் ரகங்கள் அதிகளவில் கார்போ ஹைட்ரேட் புரோட்டீன், வைட்டமின் மற்றும் தாது உப்புக்களைக் கொண்டுள்ளது.

இத்தகைய பாரம்பரிய நெல் ரகங்கள் அதிக மருத்துவ குணம் வாய்ந்தவை. அவற்றின் மருத்துவ குணங்கள் மற்றும் விதைப்பரிசோதனை முறைகள் குறித்தும் ஆலோ சனை வழங்கப்பட்டுள்ளது.

நெல் பயிருக்கு குறைந்த பட்சம் 80 சதவீத முளைப்புத்திறன் இருக்க வேண்டும்.

ஈரப்பதம் அதிகபட்சமாக 13 சதவீதம் இருக்க வேண்டும். விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தங்கள் வசம் உள்ள விதை ரகங்களில் 100 கிராம் என்ற அளவில் மாதிரிகள் எடுத்து விதை மாதிரிகளுடன் தங்கள் பெயர், இருப்பிட, முகவரி மற்றும் பகுப்பாய்வு கட்டணமாக ரூ.80 ஐ தஞ்சாவூர் காட்டுத்தோட்ட த்தில் இயங்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்தில் செலுத்தி விதைகளின் தரத்தை பகுப்பாய்வு மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இதனால் விதைக்கான செலவைக் குறைத்துக் கொள்வதுடன் அதிக மகசூலை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com