களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கூட்டம்

சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி நிதி குறித்து பேசினார். கூட்டத்தில் வி.ஆர்.புரம் கிழக்கு தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கூட்டம்
Published on

களக்காடு:

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம் தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் கபீர் வரவேற்று பேசினார். இணைசெயலாளர்கள், ரபீக், ஆரிப் பைஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி நிதி குறித்து பேசினார். கூட்டத்தில் 27 வார்டு மக்களும் பயன்படுத்தும் சிவபுரம் பொது பாதையை அடைத்த வனத்துறைக்கு எதிராக சட்ட ரீதியான போராட்டங்களை மேற்கொள்வது, களக்காடு காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விசாரணை துரித படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி நிதி திரட்டல் சம்மந்தமாக கூடுதல் கவனம் செலுத்துவது, வி.ஆர்.புரம் கிழக்கு தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் செயற்குழு உறுப்பினர்கள் எம்.எம். நாசர், ராம்நாடு பீர்முகம்மது, முஹம்மதுஅலி ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com