ஆத்தூர் அருகே கொடுத்த பணத்தை கேட்ட பெயிண்டருக்கு வெட்டு

முத்துராஜ் அதே ஊரை சேர்ந்த பேச்சிமுத்து என்பவருக்கு 2 மாதத்திற்கு முன்பு கடனாக ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார். கடந்த 4-ந்தேதி கணேசன் வேலை செய்யும் ஏரலில் உள்ள கடையில் வைத்து பணத்தை கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர் அருகே  கொடுத்த பணத்தை கேட்ட பெயிண்டருக்கு வெட்டு
Published on

ஆத்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தெற்கு ஆத்தூர் நரசன்விளையை சேர்ந்த ராமசாமி மகன் முத்துராஜ் (வயது28). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

ரூ. 5 ஆயிரம் கடன்

இவர் அதே ஊரை சேர்ந்த கணேசன் மகன் பேச்சிமுத்து (25) என்பவருக்கு 2 மாதத்திற்கு முன்பு கடனாக ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார். அதனை பலமுறை திருப்பி கேட்டும் அவர் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த 4-ந்தேதி கணேசன் வேலை செய்யும் ஏரலில் உள்ள கடையில் வைத்து பணத்தை கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் இரவு முத்துராஜ் நரசன்விளை அம்மன் கோவில் அருகே வந்த போது அங்கு வந்த பேச்சிமுத்து, அவரது தம்பி இசக்கி ராஜா ஆகியோர் பணம் கேட்டு வேலை செய்யும் கடைக்கு எப்படி வரலாம் என தகராறு செய்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பேச்சிமுத்து அரிவாளை எடுத்து முத்துராஜை வெட்டிவிட்டு சென்றுவிட்டார். காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com