சிறுமுகை அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

சகோதரிக்கு நியாயம் கேட்டு தந்தையுடன் வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
சிறுமுகை அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
Published on

கோவை,

கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள சின்னகள்ளிப்பட்டி அருகே கடுவாய்க்கரையை சேர்ந்தவர் கனகராஜ்(வயது44). இவருக்கு திருணம் ஆகி விட்டது.

இந்த நிலையில் கனகராஜூக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி சந்தித்து, தங்கள் காதலை வளர்த்தும், ஜாலியாகவும் இருந்து வந்தனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் கனகராஜின் மனைவிக்கு தெரியவரவே அவர் கணவரை கண்டித்து ள்ளார்.

ஆனாலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல், தனது கள்ளக்காதலை தொடர்ந்தார். இதையடுத்து கனகராஜின் மனைவி தனது தந்தை வீட்டுக்கு சென்று நடந்ததை சம்பவத்தை தெரிவித்தார்.

இதையடுத்து கனகராஜின் மாமனார், தனது இளைய மகளுடன் அங்கு சென்று, ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டார். அதற்கு நான் அப்படி தான் செய்வேன் என கூறிய கனகராஜ் அவரை தாக்க முயன்றார்.

இதனை அவருடன் வந்த இளையமகள் பார்த்து தடுக்க முற்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, அவரை வெட்டினார்.

இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com