களக்காடு அருகே கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு- 2 பேருக்கு வலைவீச்சு

அஜித்குமாருக்கும், லிங்கம் மகன் பிலிப் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. காயமடைந்த அஜித்குமார் ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
களக்காடு அருகே கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு- 2 பேருக்கு வலைவீச்சு
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள ராமச்சந்திரபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் அஜித்குமார் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கும் மாவடி எம்.எஸ்.எஸ்.நகரை சேர்ந்த லிங்கம் மகன் பிலிப் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

சம்பவத்தன்று அஜித்குமார் மாவடி பஜாருக்கு பூ வாங்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பிலிப், முத்துகிருஷ்ணன் மகன் சரவணன் ஆகியோர் அஜித் குமாரை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த அஜித்குமார் ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிலிப், சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com