நெல்லை டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர்.
கண்காட்சியில் மாவட்ட அறிவியல் மைய நிர்வாகி குமார் குத்துவிளக்கேற்றிய காட்சி. அருகில் பள்ளி தாளாளர் மரியசூசை.
கண்காட்சியில் மாவட்ட அறிவியல் மைய நிர்வாகி குமார் குத்துவிளக்கேற்றிய காட்சி. அருகில் பள்ளி தாளாளர் மரியசூசை.
Published on

நெல்லை:

நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மரியசூசை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட அறிவியல் மைய நிர்வாகி குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர். இதனை சேவியர் பொறியியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் கல்லூரி விரிவுரையாளர்கள் மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்பு களை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மரியசூசை செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com