சண்முகாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.
சண்முகாபுரம்  அரசு உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
Published on

சண்முகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை (பொ) அருள் செல்வி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.

வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன. பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை வைத்திருந்தார்கள். உலக வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் போன்ற தலைப்பில் வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் கருத்துரையாற்றினார்கள்.

பள்ளியில் அனைத்து மாணவ-மாணவிகளும் கண்காட்சியை கண்டு களித்தனர். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் தங்கபாண்டி மற்றும் கணித ஆசிரியை பர்வீன் ராணி மற்றும் ஆய்வக உதவியாளர் லதாவும் செய்திருந்தார்கள். சிறந்த படைப்புகளுக்கு வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் புத்தக பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டி ஊக்கமளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com