6 மாத கர்ப்பிணியான பிளஸ்-2 மாணவி: மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு

மாணவி 6 மாத கர்ப்பம் அடைந்த நிலையில், இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. மாணவியை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
6 மாத கர்ப்பிணியான பிளஸ்-2 மாணவி: மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு
Published on

தருமபுரி:

தருமபுரியை அடுத்துள்ள டி.கடிகார அள்ளி கிராமத்தை சேர்ந்தவர், 17 வயது மாணவி. இவர் ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

இதே பள்ளியில் படிக்கும் உம்மியம்பட்டி பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, மாணவியிடம் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கிய அந்த மாணவன் பல முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதில் அந்த மாணவி, 6 மாத கர்ப்பம் அடைந்த நிலையில், இதுகுறித்து, மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த மாணவியை தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

பின்னர் பெற்றோர் உதவியுடன் மாணவி கொடுத்த புகாரின் பேரில், தருமபுரி அனைத்து மகளிர் போலீசார், மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com