பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர்: போலீசார் விசாரணை

புரசைவாக்கத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவருடன் மாணவி நெருங்கி பழகி வந்தது தெரிந்தது.மாணவரின் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர்: போலீசார் விசாரணை
Published on

பெரம்பூர்:

வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி புரசைவாக்கத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்றில் வலி ஏற்பட்டது. இதற்காக அவரை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக தாய் அழைத்து சென்றார்.

டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. இதை கேட்ட மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் செம்பியம் அனைத்துமகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது புரசைவாக்கத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவருடன் மாணவி நெருங்கி பழகி வந்தது தெரிந்தது. அந்த மாணவரால், மாணவி கர்ப்பம் ஆகி இருப்பது தெரியவந்தது.

அந்த மாணவர் புரசைவாக்கத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வரும் போது மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

மாணவரின் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் வேலைக்கு சென்றதும் மாணவர் தனது வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்று அடிக்கடி தனிமையில் இருந்து உள்ளார். மாணவியின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள் ஆவர்.

மாணவியை கர்ப்பம் ஆக்கிய மாணவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com