லாரி மோதி பள்ளி மாணவன் பலி

மணல் ஏற்றி வந்த லாரி சிறுவனின் மீது மோதியது.ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரி கண்ணாடிகளை உடைத்தனர்.
பலியான மாணவன் கவிபாலன்.
பலியான மாணவன் கவிபாலன்.
Published on

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி பவனமங்கலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கவி பாலன் (வயது 5). தனியார் பள்ளி மாணவன்.

நேற்று மாலை பள்ளி விட்டு தனியார் வேனில் வீட்டுக்கு திரும்பி கவிபாலன் வேனில் இருந்து இறங்கி சாலையை கடந்து வீட்டுக்கு சென்ற போது திருவையாறு பகுதியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி சிறுவனின் மீது மோதியது.இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கவிபாலன் உயிர் இழந்தான்.

இதனால் அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்து லாரியில் கண்ணாடிகளை உடைத்தனர் .அதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ், பூதலூர் தாசில்தார் பெர்ஷியா, திருக்காட்டுப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு தந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

இந்ததுயர சம்பவம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com