காங்கயத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி

வீட்டின் அருகே உள்ள மின்சார மீட்டா் பெட்டியின் கம்பியை எதிா்பாராத விதமாக தொட்டுள்ளாா். விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனா்.
காங்கயத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி
Published on

காங்கயம் : 

மூலனூரை அடுத்த நத்தப்பாளையம் பகுதியை சோ்ந்த பாலமுருகன் மகன் செல்வகுமாா் (வயது 14). இவா் நத்தப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 8- ம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளிக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் காங்கயம் சக்தி நகா் அருகே உள்ள தனது உறவினா் வீட்டுக்கு அவா் வந்துள்ளாா்.

இவா் தன் நண்பா்களுடன் விளையாடி கொண்டிருந்தாா். அப்போது வீட்டின் அருகே உள்ள மின்சார மீட்டா் பெட்டியின் கம்பியை எதிா்பாராத விதமாக தொட்டுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா்.அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் செல்வகுமாா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனா். 

X

Maalai Malar
www.maalaimalar.com