கூத்தாநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூத்தாநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கோட்டகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். கூலித் தொழிலாளி. இவரது மகன் மதன்ராஜ் (வயது 15). இவர் மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் மாரியம்மன் கோவிலில் ஆனி மாத திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறுவதை ஒட்டி கோவில் திருவிழாவிற்காக மதன்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் ரூபன் (21) சஞ்சய் ( 19), சித்தார்த்தன் (22) ஆகியோர் கோவிலின் அருகே பேனர் வைத்தனர்.

அப்போது அந்த பேனர் மேலே சென்ற மின் கம்பி உரசியதில் 4 பேர் மீதும் மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

உடன் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மதன்ராஜ் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவித்தனர். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இறந்த மதன்ராஜ் உடலை உடற்கு ஆய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது கோவில் திருவிழாவில் பேனர் வைக்கும் பொழுது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com