பெரியகுளம் அருகே பள்ளி மாணவி மாயம்

தேர்வு எழுத சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரியகுளம் :

பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகள் ஹரினி (வயது 17). இவர் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலாண்டுத்தேர்வு எழுத பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றார்.

ஆனால் அவர் அங்கு வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அதிர்ச்சியடைந்த பரமசிவம் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com