கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தமிழக அரசு செயல்படுகிறது -அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

கலைவிழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தமிழக அரசு செயல்படுகிறது என பேசினார்.
நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Published on

ஒட்டன்சத்திரம்:

தமிழக அரசு பள்ளி க்கல்வித்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சுகப்பிரியா வரவேற்று ப்பேசினார். 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனங்கள் ஆடி தங்களின் திறமைகளை காட்டினர். மேலும் கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கேற்றனர்.

விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மற்றும் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கி அவர் பேசிய தாவது :-

பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஆகிய துறைகளை இரு கண்களாக நினைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் கல்வியின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறார்.

மாணவர்கள் உயர்ந்த எண்ணங்களை கொண்டு நல்ல கல்வி கற்று வாழ்க்கை யில் உயரவேண்டும்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைசாமி, நகராட்சி துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் (தொட க்கல்வி) செந்தில்முருகன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, கே.ஆர்.அரசு மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி, வட்டார வளமைய வட்டார ஒருங்கிணைப்பாளர் முனித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com