சின்னசேலம் தாலுகாவில் சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவ- மாணவிகள் அவதி

சின்னசேலம் தாலுகாவில் சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.
சின்னசேலம் தாலுகாவில்  சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவ- மாணவிகள் அவதி
Published on

கள்ளகுறிச்சி:

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட வடக்கநந்தல் சின்னசேலம் நைனார்பாளையம் உள்ளிட்ட குறு வட்டங்கள் உள்ளன.இந்த குறு வட்டங்களில் உள்ள இந்த குறு வட்டங்கள் மூலமாகவும் சாதி வருமானம் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளி பொதுத் தேர்வு நடந்தது தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டன இந்தநிலையில் உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவ-மாணவிகள் சாதி வருமானம் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் உயர்கல்வி படிக்க தேவைப்படுவதால் 1000 கணக்கான மாணவ மாணவிகள் இ சேவை மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக தாசில்தாரை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் அவர்களிடமும் சரியான பதில் இல்லை இதனால் விண்ணப்பித்தும் சான்றிதழ் பெற முடியாமல் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பிக்கும் சான்றிதழ்களை கிடப்பில் போடாமல் தினசரி இ சேவை மையம் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேல் நடவடிக்கைக்கு அனுப்ப வேண்டும் என மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com