பாளையில் பள்ளி மாணவன் தற்கொலை

பாளை தியாகராஜநகரை அடுத்த ராஜகோபாலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் அரிராமகிருஷ்ணன் (வயது 15). பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். அரிராமகிருஷ்ணன் சரியாக படிக்காமல், எப்போதும் செல்போனை பார்த்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
பாளையில் பள்ளி மாணவன் தற்கொலை
Published on

நெல்லை:

பாளை தியாகராஜநகரை அடுத்த ராஜகோபாலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயி.

பள்ளி மாணவன்

இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் அரிராமகிருஷ்ணன் (வயது 15). பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் அரிராமகிருஷ்ணன் சரியாக படிக்காமல், எப்போதும் செல்போனை பார்த்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அவனது பெற்றோர் கண்டித் துள்ளனர். இதனால் மனமுடைந்த அரிராம கிருஷ்ணன் நேற்று விஷத்தை குடித்து விட்டான். அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அரிராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com