கனமழையால் வைக்கோல் தட்டுப்பாடு; மாடுகளுக்கு தீனியாக கரும்பு சோகை வழங்கும் விவசாயிகள்

அறுவடைக்கு தயாரான பல ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.ஈரப்பதம் காயாததால் பல பகுதிகளில் அறுவடை பணி முற்றிலும் பாதிப்பு.
மாடுகளுக்கு தீனியாக கரும்பு சோகையை வழங்கும் விவசாயி.
மாடுகளுக்கு தீனியாக கரும்பு சோகையை வழங்கும் விவசாயி.
Published on

பாபநாசம்:

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பல ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

விவசாய நிலங்களில் இன்னும் ஈரப்பதம் காயாததால் பல பகுதிகளில் அறுவடை பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை நடைபெறாததால் தற்போது வைக்கோல் கட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் கால்நடை விவசாயிகளுக்கு வைக்கோல் கிடைக்காததால் கரும்பு சோகையை தங்களது மாடுகளுக்கு தீனியாக வழங்கி வருவதாக கால்நடை வளர்ப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com