சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு

விபத்தில் சிக்கிய பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தரைமட்டமான பட்டாசு ஆலை
தரைமட்டமான பட்டாசு ஆலை
Published on

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் பட்டாசு ஆலையில் 6 அறைகளில் சிறிய ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு ஒரு அறை தரைமட்டமானது.

இந்த வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிற்சாலை உரிமையாளர் கருப்பசாமி, செந்தில்குமார், அய்யம்மாள், காசி ஆகிய நான்கு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த முனியசாமி என்பவரும் உயிரிழந்தார்.

இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com