சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றவர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு வழங்கினார்.
ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் சமபந்தி விருந்தில் கலந்துகொண்டபோது எடுத்தபடம்
ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் சமபந்தி விருந்தில் கலந்துகொண்டபோது எடுத்தபடம்
Published on

சங்கரன்கோவில்:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர நிர்வாகி பிரகாஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றவர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு வழங்கினார். தொடர்ந்து அவர்களுடன் சமபந்தி விருந்தில் பங்கேற்றார். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பன், நகராட்சி கவுன்சிலர்கள் புஷ்பம், அலமேலு, விஜய்குமார், செல்வராஜ், குருப்பிரியா ராமராமர், தி.மு.க. வக்கீல் சதீஷ், காவல் கிளி ஜெயக்குமார், சங்கர், மாணவரணி கார்த்தி, அப்பாஸ்அலி, வார்டு செயலாளர்கள் ஜிந்தாமைதீன், கோமதிநாயகம் மற்றும் அன்சாரி பீர்முகமது, பிரபாகரன், கோமதி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் ஆகியோர் கோவிலில் உள்ள பூலித்தேவர் அறைக்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல கவுரி சங்கர் தியேட்டர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com