கோவையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

வேறு பணிகளை செய்யச் சொல்வதாக குற்றச்சாட்டு மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து முறையிட முடிவு
கோவையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
Published on

கோவை,

மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் நிரந்தர தூய்மை பணியாளர்களை பத்தாண்டுகளுக்கு மேலாக தாங்கள் செய்து வந்த பணிகளை தவிர்த்து வேறு பணிகளை செய்யச் சொல்வதாக கூறி உள்ளிருப்பு போராட்டம் 180 க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் குப்பைகளை பிரித்தெடுக்கும் தொழில் செய்து வந்த தங்களை சாக்கடை மலம் அள்ளும் தொழிலுக்கும் தற்போது பணிஅமர்த்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சாலை நடுவே உள்ள தடுப்புகளில் ஆபத்தான முறையில் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவதாகவும் ஓய்வு பெறும் வயதில் உள்ள தங்களை வேறு பணிகளுக்கு பணி அமர்த்துவதாக கவலை தெரிவித்தனர். மாநகராட்சி துணை ஆணையர் சிவகுமார் சமாதானம் செய்ய முற்பட்டார்.

இருப்பினும் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com