கோவில்பட்டி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கோவில்பட்டி செல்வ மங்கள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.விழாவில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி விநாயகர் கோவிலில்  சங்கடஹர சதுர்த்தி பூஜை
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி சாய்சிட்டி நகரில் அமைந்துள்ள செல்வ மங்கள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 9 மணிக்கு செல்வ மங்கள விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணியன் அய்யர் செய்தார். விழாவில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com